[vc_row][vc_column][vc_column_text]
www.tnpsc.academy – TNPSC Current Affairs in Tamil – Nov. 01, 2016 (01/11/2016)
Download as PDF
தலைப்பு : வரலாறு – இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகள்
சூர்யா கிரன் – X
சூர்யா கிரன் – X என்ற இந்தியா மற்றும் நேபால் நாடுகளுக்கு இடையேயான கூட்டு இராணுவ பயிற்சியை நேபாலில் உள்ள ஸல்ஜிஹந்தியின் (Saljhandi) இராணுவ போர் பள்ளியில் ஆரம்பிக்கபட்டுள்ளது.
இப்பயிற்சி பற்றி :
இந்த உடற்பயிற்சி மலைப்பாங்கான இடங்களில் பயங்கரவாத தாக்குதல் தடுப்பினை வலியுறுத்தியும் படைப்பிரிவின் நிலையான கூட்டு பயிற்சியாகவும் நடத்த உதவுகிறது.
பேரிடர் மேலாண்மை முகாம்கள் கொண்ட அம்சங்களும் இந்த உடற்பயிற்சியில் சேர்க்கப்பட்டுள்ளது.
கூட்டு நிலை உடற்பயிற்சி இரண்டு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் கூட்டுறவு அதிகரிக்கவும் இப்பயிற்சி உதவுகிறது.
இந்த உடற்பயிற்சி இரு தேசங்களுக்கு இடையிலான பாரம்பரிய நட்பினை மற்றொரு படியாக அதிக உயரத்துக்கு எடுத்து செல்ல உதவுகிறது.
தலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்
உலக சைவ தினம்
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1 முதல், உலக சைவ தினம் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது மேலும் விலங்கு உரிமைகள் பற்றி விழிப்புணர்வு எழுப்பவும் மற்றும் அனைத்து பகுதிகளிலும் வாழ்க்கை முறை ஒரு சைவ உணவு பழக்கம் என்றும் வாதிடுகிறது.
தலைப்பு : வரலாறு – மாநிலங்களின் அமைப்பு
தொழில் புரிவதற்கு சுலபமான மாநிலங்கள் : ஆந்திர பிரதேசம் & தெலுங்கானா
வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் கீழுள்ள தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டு துறையுடன் (DIPP) உலக வங்கி குழுவும் இணைந்து, மாநில வணிக மறுசீரமைப்பு 2015-16 நடைமுறைப்படுத்தல் பற்றி மதிப்பீடு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
இதன் சிறப்பம்சங்கள் :
ஆந்திரா மற்றும் தெலுங்கானா கூட்டாக 2016-ன் அகில இந்திய மாநில / மத்திய ஆட்சிப் வாரியான எளிதாக வணிகம் புரிதலில் வணிக தரவரிசையில் கடந்த ஆண்டு உச்சத்திலிருந்த குஜராத்தை மூன்றாவது இடத்திற்கு தள்ளி, முதலிடத்தை பிடித்துள்ளது.
சத்தீஸ்கர் (நான்காவது), மத்தியப் பிரதேசம் (ஐந்தாவது), ஜார்க்கண்ட் (ஏழாவது) மற்றும் ராஜஸ்தான் (எட்டாவது) போன்ற குறைந்த வருமானம் பெறும் மாநிலங்களும் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
மற்ற மாநிலங்களை விட, ஒடிசா 11 வது இடத்தினை ஆக்கிரமிப்பு செய்துள்ளது. அதனை தொடர்ந்து பஞ்சாப், கர்நாடகா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் பீகார், இமாச்சல பிரதேசம், தமிழ்நாடு, தில்லி போன்றவை உள்ளன.
தமிழ்நாடு அந்த பட்டியலில் 18வது இடத்தில் உள்ளது.
தலைப்பு : அரசியல் விஞ்ஞானம் – பொது நிர்வாகம்
பினாமி பரிவர்த்தனைகள் (தடை) திருத்தச் சட்டம், 2016
ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றத்தில், கறுப்பு பணதினை தடுத்து நிறுத்த பினாமி பரிவர்த்தனைகள் (தடை) திருத்தச் சட்டம் 2016, வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நவம்பர் 1 ல் இச்சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்படுகிறது.
1988-ன், பினாமி பரிவர்த்தனைகள் சட்டம் ஒரு திருத்தம் மூலம், இந்த புதிய சட்டம், அது போன்ற பரிமாற்றங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும் ஏழு ஆண்டுகள் வரை சிறை மற்றும் அபராதம் வழங்கவும் வழிவகை செய்கிறது.
இதற்கு முன்னர் இருந்த சட்டம், மூன்று வருடங்கள் வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் வழங்கியுள்ளது.
[/vc_column_text][/vc_column][/vc_row]