
www.tnpsc.academy – TNPSC Current Affairs in Tamil – Oct.01, 2016 (01/10/2016)
சர்வதேச முதியோர்கள் தினம் – 2016
முதியோர்களின் மேல் கவனத்தை ஈர்க்கும்பொருட்டும் முதியோர்கள் மற்றும் வயதானவர்கள் பற்றி கொண்ட தவறான எண்ணத்திற்கு எதிர்மறையாகவும் அக்டோபர் 1 அன்று சர்வதேச முதியோர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டின் உட்கரு : “தலைமுறை பாகுபாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தல்”
இந்தியாவில் தனிச் சிறப்பு வாய்ந்த பூக்கும் தாவரங்கள்
தமிழ்நாடு, தனிச் சிறப்பான பூக்கும் தாவரங்களில் 410 இனங்களை கொண்டு இந்த பட்டியலில் உயர்ந்த இடத்தில் உள்ளது. மேலும் கேரளாவில் 357 தாவர இனங்கள் மற்றும் மகாராஷ்டிராவில் 278 இனங்கள் கொண்டு அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
புவியியல் பரப்பு படி, மேற்கு தொடர்ச்சி மலைகள் 2,116 இனங்களை கொண்டு உயர்ந்த இடத்தைப் பெற்று உள்ளது மற்றும் கிழக்கு இமயமலை பகுதிகள் 466 இனங்களை பெற்றுள்ளன.
இந்த கணக்கெடுப்பு பற்றி:
இந்தியாவின் தாவரவியல் கணக்கெடுப்பு பிரிவு (BSI), இந்தியாவில் காணப்படும் பூக்கும் தாவரங்களின் கணக்கெடுப்பினை ஒரு அறிக்கையாக வெளியிட்டது.
ஆய்வின் படி, இந்தியாவில் காணப்படும் பூக்கும் தாவரங்களில் ஒவ்வொரு நான்கு இனங்களுக்கும் கிட்டத்தட்ட ஒரு தாவரஇனம் இந்த நாட்டில் பரவலாக உள்ளது.
நாஷா முக்த் பாரத அந்தோலன் யாத்திரை (NASHA MUKT BHARAT ANDOLAN YATRA)
இந்த யாத்திரை, மகாத்மா காந்தியின் பிறந்த நாளின் நினைவைக் குறிக்கும் பொருட்டு தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமாரியில் யாத்திரை தொடங்கப்படுகிறது.
இது சமூகத்தின் மதுபான விலக்கை உறுதி செய்ய ஒரு தேசிய அளவிலான பிரச்சாரமாக உள்ளது.
விளையாட்டு துறைக்கு உள்கட்டமைப்பு நிலைமை
விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகள், உள்கட்டமைப்பு துணைப்பிரிவுகளின் பட்டியலிலன் கீழ் சேர்க்கப்படும்.
முக்கிய அம்சங்கள்:
இதன்மூலம் விளையாட்டு துறை, வங்கிகள் மற்றும் இதர நிதி நிறுவனங்களிடம் இருந்து நீண்ட கால நிதி ஆதரவைப் பெறும் தகுதி பெறுகிறது.
இந்த சேர்க்கை, நல்ல தனியார் முதலீடு மற்றும் ஒரு பொது முதலீட்டிற்கு ஊக்கம் விளைவிக்கிறது. மேலும் விளையாட்டு உள்கட்டமைப்புத் துறையில் முதலீடு செய்ய அனைவரையும் குறிப்பாக இளையதலைமுறையினரை ஊக்குவிக்கிறது.
0 responses on "TNPSC Current Affairs in Tamil – Oct. 01, 2016 (01/10/2016)"