
www.tnpsc.academy – TNPSC Current Affairs in Tamil – Sep.28, 2016 (28/09/2016)
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு கார்பன் – நடுநிலை நிலைமை
கனடாவில் நடைபெற்ற விமான நிலையங்களுக்கு கார்பன் அங்கீகாரம் சான்றிதழ் வழங்கல் விழாவின் போது, சர்வதேச விமான நிலையங்களின் கவுன்சில், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு “கார்பன் நடுநிலை” அந்தஸ்தை கொடுத்துள்ளது.
முக்கிய அம்சங்கள்:
ஆசியா – பசிபிக் பகுதியில் கார்பன் நடுநிலையை பெற்ற ஒரே விமான நிலையம் என்ற சாதனையை படைத்துள்ளது.
மேலும் உலகின் சில விமான நிலையங்களில் 25 விமான நிலையங்களுக்கும் குறைவாகவே “கார்பன் நடுநிலை”-யை பெற்றுள்ளது. அதில் ஒன்றாக இந்திரா காந்தி விமான நிலையம் தேர்வாகி உள்ளது.
இந்திரா காந்தி விமான நிலையத்தில் உள்ள பசுமை கட்டிடங்கள், சூரிய மின் உற்பத்தி நிலையங்கள், மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஆகியவை கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்துகின்றன.
இந்திரா காந்தி விமான நிலையம் தில்லி சர்வதேச விமானநிலையம் லிமிட்டெட் (DIAL), என்ற தனியார் நிறுவனத்தினரால் நிர்வகிக்கப்படுகிறது.
MCGS வெற்றி – கோவாவின் முதல் வேகமான ரோந்துக் கப்பல்
இந்தியாவின் கோவா கப்பல் கட்டுமான லிமிடெட் நிறுவனம், மொரிஷியஸ் அரசுக்கு முதல் வேகமாக செல்லும் ரோந்துக் கப்பலை தயாரித்து கொடுத்துள்ளது.
முக்கிய அம்சங்கள்:
MCGS (மொரிஷியஸ் கடலோர காவல்படை சேவை), ஒரு 50m வாகனம் மற்றும் அது கடற்கொள்ளை எதிர்ப்பு நடவடிக்கை, கடலோர ரோந்து, கடத்தல் எதிர்ப்பு நடவடிக்கை, போதை மருந்து கண்காணிப்பு மற்றும் வேட்டையாடுதலுக்கு எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் தேடல் மற்றும் மீட்பு பணிகள் போன்றவற்றிற்க்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
கோவா கப்பல் கட்டுமான நிறுவனம், இந்திய துணைக்கண்டத்தில் இருந்து இராணுவ கப்பல்களை ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக இருக்கிறது.
அளவுக்கதிகமான காற்று மாசு, மரணத்திற்கு வழிவகுக்கிறது
2012 ல் குறைந்தது 6,00,000 இந்தியர்கள் காற்று மாசுபாடு காரணமாக இறந்துள்ளது உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்டுள்ள ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கணக்கெடுப்பு பற்றி:
காற்று மாசுபாடு காரணமாக 8,00,000 மரணங்களை சீனா தழுவியுள்ளது. சீனாவின் பின்னால் இந்தியா பட்டியலிடப்பட்டுள்ளது.
ஜிம் யோங் கிம் (JIM YONG KIM)
உலக வங்கியின் மூலம் எந்த போட்டியாளரும் இல்லாமல் அடுத்த ஐந்து ஆண்டு கால தலைவராக ஜிம் யோங் கிம் (JIM YONG KIM) மறுபடியும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரை பற்றி:
அவர் அமெரிக்க – தென் கொரிய மருத்துவர் மற்றும் அறிஞர் ஆவார். மேலும் அவர் உலக வங்கியின் 12 வது தலைவராக 2012லிருந்து பணியாற்றி வருகிறார்.
உத்தம் சிங்- கிற்கு லதா மங்கேஷ்கர் விருது
வாழ்நாள் சாதனையாளர் இசை அமைப்பாளர் மற்றும் வயலின் கலைஞர் உத்தம் சிங் லதாஅவர்களுக்கு மகாராஷ்டிரா அரசினால் லதா மங்கேஷ்கர் விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்.
புதிய பல்லி இனம்
130 ஆண்டுகளுக்கு பிறகு, ஒரு புதிய பல்லி இனங்கள் மும்பையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அது பெங்களூரை சார்ந்த விஞ்ஞானியான வரட் கிரி-யின் நினைவாக கிரி கேக்கோஎல்லா (Giri Geckoella) என அழைக்கப்படுகிறது.
உலகளாவிய போட்டித்திறன் குறியீடு 2016-2017
உலகளாவிய போட்டித்திறன் குறியீட்டில் 138 நாடுகள் மத்தியில் இந்தியாவிற்கு 39வது இடம் கிடைத்தது. சுவிச்சர்லாந்து இந்த பட்டியலில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.
இந்த குறியீட்டு பற்றி:
உலகளாவிய போட்டித்திறன் குறியீடு, உலகப் பொருளாதார மன்றம் வெளியிடும் வருடாந்திர அறிக்கை ஆகும்.
இந்தியா 2015-2016 GCI-யை, ஒப்பிடும்போது 16 இடங்கள் முன்னேறி வந்துள்ளது. 2015-ல் 55 வது நிலையை பெற்றிருந்தது.
0 responses on "TNPSC Current Affairs in Tamil – Sep.28, 2016 (28/09/2016)"